ஆயுஷ் குடிநீர்:
இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
புதுடில்லி: மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி, இலவங்கப் பட்டை, சுக்கு, மிளகு ஆகியவை சேர்த்த ‘ஆயுஷ் குடிநீரை’ உருவாக்கியுள்ளது. பவுடர் மற்றும் மாத்திரை வடிவில் கிடைக்கும் இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் தந்துள்ளார்.
தினசரி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம். சுவைக்காக வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். நோயெதிர்ப்பு சக்தி பெருகும் என்கின்றனர். ஞாயிறன்று மன் கி பாத் வானொலி உரையில் மோடி, ஆயுஷ் சுகாதார அமைப்பின் பயன்பாட்டினை வலியுறுத்தினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலக முழுவதும் மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகா மீது கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
Source: